நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் குடிபோதையில் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை கட்டையால் அடித்து கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியை சேர்ந்தவர் மணி வயது 58… பட்டறை மேடு பகுதியில் பாடி பில்டிங் வேலை பார்த்து வரும் இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஆனந்த் , அரவிந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். தொண்டிக் கரடு பகுதியில் சொந்த வீடு உள்ளது. மூத்தமகன் ஆனந்த் திருமணமாகி தனியே வசித்து வருகிறார். இளையமகன் அரவிந்த் தந்தை தாயுடன் வசித்த வந்துள்ளார். இந்த நிலையில் டிங்கரிங் வேலை பார்த்து வந்த அரவிந்த் குடிபோதைக்கு அடிமையானதால் வேலைக்கு சரியாக செல்லாமல் அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் குடிபோதையில் வந்த அரவிந்த் வழக்கம் போல் சொத்தை விற்று பணம் தர கேட்டு தந்தை மணியை அடித்துள்ளார். அடி தாங்க முடியாத மணி பக்கத்தில் சென்று ஒளிந்து கொண்டார். சுமார் 11 மணிக்கு வந்து பார்த்த போது அரவிந்த் வீட்டிற்குள் போதையில் படுத்து இருப்பதை பார்த்தார்…
தன்னை தாக்கியதாலும் தொடர்ந்து தகராறு செய்வதால் அக்கம் பக்கத்தினரிடம் அவமான பட்டதாலும் ஆத்திரத்தில் இருந்த மணி அருகில் இருந்த கட்டையை எடுத்து அரவிந்தை கடுமையாக தாக்கி உள்ளார் இதில் மண்டை உடைந்து மூளை சிதறி முகம் சிதைந்த நிலையில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். தான் தாக்கியதில் மகன் இறந்து விட்டான்.
என்பதை அறிந்த மணி நள்ளிரவில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனை அடுத்து அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post