சேலம் மாவட்டத்தில் மனைவி குடும்பம் நடத்த வராததால் ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளி தனது 3 மாத ஆண் குழந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியை சேர்ந்த பூமலை மகன் கேசவன், தனியார் பால் பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பி.டெக் பொறியியல் பட்டதாரி பெண் அபிராமி என்பவருக்கும் 2018 ஆண்டு திருமணம் நடைபெற்றது. அபிராமி ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அபிராமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற அபிராமியை குடும்பம் நடத்த வருமாறு கேசவன் அழைத்துள்ளார். ஆனால் அவர் வரமறுத்ததால் ஆத்திரத்தில் குழந்தையின் மூச்சை அடைத்து கொலை செய்தார். அதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post