ஒரே நேரத்தில் இரட்டை லாபம் பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இரட்டை சாகுபடி முறையை திண்டுக்கல் விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவுப்பொருளிள்களின் தேவையை சரி செய்யும் நோக்கில் விவசாயத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிழல்வலை அமைத்தல், பசுமைக்குடில், சொட்டு நீர் பாசனம், நிலப்போர்வை அமைத்தல், பல அடுக்கு சாகுபடி வரிசையில் இரட்டை சாகுபடி முறையில் தற்போது செண்டு மல்லி மற்றும் கிர்ணி பழ விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் சோதனை முறையில் இந்த இரட்டை சாகுபடி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக வெயில் காலங்களில் மட்டுமல்லாது அனைத்து காலங்களிலும் கிர்ணிபழம் அதிக விளைச்சலைத் தரவல்லது. ஆனால் அதில் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும் என்பதால் அவற்றை விரட்டுவதற்கு செண்டு மல்லி பூச்செடிகள் வயல்களின் நடுவே நடவு செய்யப்பட்டு பூத்துக்குலுங்குகின்றன.
கிர்ணிபழத்தை தாக்க வரும் பூச்சிகள் செண்டு மல்லி பூ வாசனையால் விலகி ஓடுகின்றன. அந்தவகையில், செண்டுமல்லி பூச்சிவிரட்டியாகவும் , லாபகரமான பூக்களை தருவதாகவும் உள்ளது. இரட்டை லாபத்திற்கு இந்த வழிமுறையை மற்ற விவசாயிகளும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
Discussion about this post