ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனங்கருப்பட்டிகள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
கோபிச் செட்டிப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பனங்கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கிடைக்கும் பதநீரைக் காய்ச்சி அச்சுகளில் ஊற்றப்பட்டு கருப்பட்டி தயார் செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பனங்கருப்பட்டிகள் பதிப்பாளையம் ஏலக் கூடத்தில் விற்பனை செய்யப்படும். இந்த வருடம் ஒரு கிலோ பனங்கருப்பட்டி 122 ரூபாய் வரை ஏலம் போவதுடன் பணமும் உடனடியாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post