திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்ததையடுத்து, மணிலா பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரண்டு நாட்கள் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில், இயற்கை உரங்களான மாட்டுச் சாணம், தழை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மணிலா பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்தால், விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post