விவசாயிகள் பயன்பாட்டிற்காக கேரளாவில் இருந்து 650 டன் எடை கொண்ட சல்பேட் உர மூட்டைகள் ரயில் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. கேரளா மாநிலத்தில் உள்ள கோலஞ்சேரி என்ற இடத்தில் இருந்து, 650 டன் எடைக் கொண்ட சல்பேட் உர மூட்டைகள் ரயில் மூலம் விருத்தாசலம் வந்தடைந்தது. இவை, சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு வருகிறது.
இம்மூட்டைகளை கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வேளாண்மை கடைகள் மற்றும் பல்வேறு தனியார் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
Discussion about this post