டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 22 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் போராட்டத்தில் பங்கேற்காத விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி எல்லையில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் ஒரே இடத்தில் விவசாயிகள் கூடியது பற்றி மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post