ராமநாதபுரம் மாவட்டத்தில், மிளகாய் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பறவைகளிடமிருந்து மிளகாயை பாதுகாக்க நூதன முறையை கையாண்டு வருகின்றனர்
ராமநாதபுரம் மாவட்டம், செவ்வூர்,அக்கரஞ்சேரி, பாண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மிளகாயை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையக்கூடிய மிளகாய்கள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது மிளகாய் பழுத்து வரும் நிலையில், இதனை மைனா, கிளி, கவுதாரி, காகம் உள்ளிட்ட பறவைகள் சேதப்படுத்தி அழித்து வருகின்றன. இதனை பாதுகாக்கும் விதமாக விவசாயிகள் தங்களின் மிளகாய் வயல் காடுகளில் சேலைத்துணி, கோணி ஆகியவற்றை கொடி மற்றும் தோரணம் போன்று கம்புகளில் ஊண்டி மிளகாயை பாதுகாத்து வருகின்றனர்.
Discussion about this post