கொய்யா சாகுபடியில் நல்ல லாபம் கிடைத்துள்ளதால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சின்னதாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்பட்ட கொய்யா மரக்கன்றுகளின் பராமரிப்பிற்காக இலவச மின்சாரமும் வழங்கப்பட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு சுமார் 50 முகல் 60 கிலோ வரை கொய்யா சாகுபடி செய்யப்படுவதாகவும் சுமார் ஒரு கிலோ கொய்யா 60 ரூபாய் வரை விலைபோவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post