காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக, ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28ம் தேதி மூடப்படுவது வழக்கம். அதன்படி 28ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், தஞ்சை டெல்டா பகுதியில் சம்பா மற்றும் தாளடி நடவு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நடவு செய்து கதிர் வரும் நிலையில் உள்ள, 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், மேட்டூர் அணையை மீண்டும் திறந்து, கூடுதலாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post