தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஆலியாளம் பகுதியில் அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றால் 5 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 81 கிலோ மீட்டர் தூரம் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, ஓசூர் – கெலவரப்பள்ளி என்ற இடத்தில் 44 அடி உயரத்தில் ஒரு அணையும், கிருஷ்ணகிரி – முத்தூர் என்ற இடத்தில் 52 அடி உயரம் கொண்ட அணையும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் சூளகிரி அடுத்த ஆலியாளம் பகுதியில் புதிதாக அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post