புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள், வரும் 14 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், டெல்லி எல்லையில் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மத்திய அரசுடன் நடைபெற்ற ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், கடந்த 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி நடைபெற இருந்த 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 14 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post