காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவாரூரில் காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் தலைவாசலில், ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மடலமாக அறிவித்தார். அதற்கான அரசாணையையும் வெளியிட்டு புதிய வரலாறு படைத்தார். இதற்கு, விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அமோக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்தமைக்காக, அனைத்து விவசாய சங்கங்களும் சேர்ந்து, காவிரி சீ ரெங்கநாதன் தலைமையில், திருவாரூரில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்துகின்றன. இவ்விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்புரை வழங்குகிறார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
Discussion about this post