தாளவாடி மலைப்பகுதியில் வெள்ளை பூண்டு விவசாயத்தில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடியைஅடுத்தஆசனூர்மலைப்பகுதியில்பல்வேறுவகையானவிவசாயபணிகள்மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இந்த பருவத்தில் வெள்ளை பூண்டு அதிகாக பயிரிடப்பட்டுள்ளது. இந்தநலையில், கடந்த சில நாட்களாக ஆசனூர்,கேர்மாளம் பகுதியில் தொடர்ச்சியாக பரவலான மழை பெய்ததால், தண்ணீர் தொடர்ச்சியாக தேங்கி வெள்ளை பூண்டில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேர் அழுகல் நோய்க்கு வேளாண்மை துறை மூலமாக சரியான தீர்வு கண்டு பயிர்களை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post