இந்தியன் வங்கியின் வராக்கடன் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக இருப்பதாகவும், கொடுக்கப்பட்ட கடன்களிலேயே விவசாயிகள் தான் அதிக அளவு கடன்களை திரும்பி செலுத்தி உள்ளாதாகவும் வங்கியின் பொதுமேலாளர் செழியன் தெரிவித்தார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 2018 மற்றும் 19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொதுமேலாளர் செழியன், 2018 மற்றும் 19 நிதியாண்டில், 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் செய்து இருப்பதாகவும், இதுகடந்த நிதியாண்டை விட 16 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post