பூசாரிப்பட்டி, போச்சம்பள்ளி, பண்ணந்தூர், அகரம், அரசம்பட்டி, செல்லம்பட்டி, நாகரசம்பட்டி, பாரூர், நெடுங்கல், வீரமலை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில், 4 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு தென்னை விவசாயிகள் மரத்திலிருந்து தேங்காய்களாக இறக்காமல், கொப்பரைகளாக எடுத்து விற்கின்றனர். இதன்மூலம் சராசரியாக 4 தேங்காய்கள் மூலம் கொண்ட 1 கிலோ கொப்பரையை விற்றால் நூறு ரூபாய் கிடைப்பதாகவும், இதுவே தனியாக ஒரு தேங்காயை விற்றால் 15 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகள், பல்வேறு வடமாநிலங்களுக்கு, ஆண்டு முழுவதும் தேங்காயை மதிப்புக்கூட்டி கொப்பரைகளாக ஏற்றுமதியை செய்கின்றனர்.
Discussion about this post