பாலீதீன் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில் தற்போது மூங்கிலால் ஆன பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மூங்கில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளான ஓடைப்பட்டி, தவசிமேடை உள்ளிட்ட பகுதி மக்கள் மூங்கில்களை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். மூங்கில்கள் மீன் தூண்டில்கள், கொக்கிகள், சிலம்பம் மற்றும் மேடை பந்தல் அமைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தரம் பிரிக்கப்பட்ட மூங்கில்கள் 500 ரூபாய் வரை விற்பனையாகின்றன.
Discussion about this post