ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் முகூர்த்த தினங்கள் வருவதையொட்டி, திண்டுக்கல் பூ மார்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு நிலக்கோட்டை, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பூக்கள் விற்பனை விலை சிறிது குறைந்தே காணப்பட்ட நிலையில் தற்போது ரம்ஜான் மற்றும் தொடர் முகூர்த்த தினங்கள் வரவுள்ளதை அடுத்து பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ 400 மூதல் 500 ரூபாய் வரையும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், சம்பங்கி 220 ரூபாய்க்கும் கோழிக்கொண்டைப்பூ 200-லிருந்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post