திண்டுக்கல்லில், இயற்கை முறையிலான பீட்ரூட் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜக்காபட்டி, கல்பட்டி, தீத்தாம்பட்டி, கிடாப்பட்டி, போடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் பீட்ரூட் சாகுபடி அதிகரித்து வருகிறது. 50 முதல் 60 நாட்களில் பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது. ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில், வேளாண் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். இதன் காரணமாக விளைச்சல் அதிகரித்திருக்கிறது. ஏக்கருக்கு ஒரு டன் வரை அறுவடை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். உள்ளூர் மட்டுமின்றி, கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post