கிருஷ்ணகிரியில் நடப்பாண்டில் வாழை விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் சுமார் ஆயிரத்து 800 எக்டேரில் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் வாழைப் பழங்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு பருவமழை குறைந்ததால் வாழை பயிரிடுவதில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது பருவமழை கைகொடுத்ததால், ஏராளமான விவாயிகள் வாழை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ஆயிரத்து 200 வாழைத்தார் வீதம், 50 டன் மகசூல் கிடைக்கும் எனவும், ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Discussion about this post