விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் தண்ணீர் பற்றாக்குறை குறைந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாவட்டம் ஆந்தியூர் வனப்பகுதியில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அந்தியூர் அடுத்துள்ள வரட்டுப்பள்ளம், வட்டகாடு காக்காயனூர், எண்ணமங்களம் , பர்கூர் மலை வனப்பகுதியில் திடீரென பரவலாக மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. வறண்டு கிடந்த வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் சிறுதானிய சாகுபடி செய்ய பயனுள்ளதாகவும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Discussion about this post