சேலத்தில் 80 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ சாமந்திப்பூ தற்போது 8 ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுக்காகளில் சாமந்தி பூவை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளைந்த சாமந்திப்பூக்களை நாள்தோறும் பூசாரிப்பட்டி பூ சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் தற்போது சாமந்திப் பூக்கள் அதிக விளைச்சல் கண்டுள்ளது.
இதனால் சந்தைக்கு பூ வரத்து அதிகரித்துள்ளது. இன்று மட்டும் பூசாரிப்பட்டி சந்தைக்கு 18 டன் சாமந்தி பூக்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதனால் கலர் ரக பூக்கள் கிலோ 8 ரூபாய்க்கும், மஞ்சள் ரக பூக்கள் அதற்கும் குறைவாகவும் விற்பனையானது. கடந்தாண்டு இதே மாதம் இதே ரக பூக்கள் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது விலை சரிவால் வியாபாரிகள் பூக்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் பூ விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.
Discussion about this post