வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நுண்நீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிலத்தடி நீரை சேமிக்கும் வகையிலும், குறைந்த நீரை கொண்டு அதிக செடிகளுக்கு நீர்பாசனம் செய்யும் விதத்திலும் குடியாத்தத்தில் வேளாண்மை அலுவலகம் சார்பில் விவசாயிகளுக்கு நுண்நீர் பாசன பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண்மை அலுவலர்கள் ஆனந்தன், பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நுண்நீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இந்தமுறையில் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவை அதிக மகசூல் கொடுக்கும் என்று தெரிவித்த அதிகாரிகள், மேலும் இந்தமுறையில் மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், காலநேரமும் சேமிக்கப்படும் என்றும் கூறினர்.
Discussion about this post