ஃபானி புயல் இன்று அதிகாலையில் அதி தீவிர புயலாக மாறியது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபானி புயல் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அதி தீவிர புயலாக மாறியது. இதையடுத்து வங்கக் கடலையொட்டி அமைந்துள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் ஃபானி புயல் அதன் பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபானி புயல் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் நான்கு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.