ரியல் தலைவா ஹாரிஸ்,ட்விட்டரில் குவியும் பாராட்டு..ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ்.’மின்னலே’ படத்தில் தொடங்கி ’காப்பான்’ திரைப்படம் வரை தனது தனித்துவமான இசை மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது சரவணா ஸ்டோர் உரிமையாளர் நடிக்கும் படத்திற்கும் ஹாரிஸ் தான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடியாதாக கூறி அந்த புகைப்படத்தை ஹாரிஸ் ஜெயராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘லக்‌ஷ்மியின் பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடினோம்.எங்கள் வீட்டில் 7 ஆண்டுகளாக வேலை பார்க்கிறார்.கடவுள் ஆசீர்வதிக்கட்டும் ‘ என கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள்,அந்த மனசு தான் தலைவா கடவுள், ரியல் தலைவா என தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version