ஃபானி புயல் எச்சரிக்கை காரணாமாக ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்காரணமாக ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வலைகளை உலர வைத்தும், பராமரிப்பு செய்தும் படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தங்களுக்கு இடக்கால நிவாராணம் வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post