ஃபானி புயல் தாக்கக்கூடிய அபாயம் இருக்கும் பகுதிகளில் உஷார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ஃபானி புயலால் உருவாகியிருக்கும் அசாதார சூழல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஃபானி புயல் தாக்கக்கூடிய அபாயம் உள்ள மாநிலங்களின் அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுமாறும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். இதனிடையே அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.