பழனி அருகே காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்பகையால் பெண்ணின் கணவரும் அண்ணனும் ஒருவரையொருவர் கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகள் சத்யா அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் என்பவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சத்யா வீட்டைவிட்டு வெளியேறி, ஸ்ரீரங்கனைத் திருமணம் செய்து கொண்டார். இதனால், சத்யாவின் அண்ணன் பாஸ்கருக்கும், கணவர் ஸ்ரீரங்கனுக்கும் இடையில் பகை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றுக் காளியம்மன் கோயில் அருகில் இருவரும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டபோது மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் மாறிமாறிக் கத்தியால் குத்திக் கொண்டனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post