ஈரோடு கிழக்குசட்டமன்றத் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

இந்திய தேர்தல் ஆணையரை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. சி.வி.சண்முகம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடைபெற வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்றும், முறைகேடான, மோசடியான வாக்காளர் பட்டியலை வைத்து இடைத்தேர்தலை நடத்த விடியா அரசு திட்டம் தீட்டியுள்ளதாகவும் எம்.பி. சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இடிக்கப்பட்ட வீடுகளிலும், ஆட்களே இல்லாத வீடுகளின் முகவரிகளில் வாழ்வதாக கூறி போலியான வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இறந்த வாக்காளர்கள் 5 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் போலி வாக்காளர்கள் பெயரில் திமுக குண்டர்கள் வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சிவி சண்முகம் குற்றம் சாட்டினார்.

மேலும், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பூத்சிலிப் கொடுக்கக்கூடிய பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரிகள் உண்மையான முகவரியா? என சரிபார்த்த பின்னரே பூத் சிலிப் கொடுக்கப்பட வேண்டும் எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் விடியா அரசுக்கு ஆதரவாக இருக்கும் காவல்துறையை நம்ப முடியாது என்பதால், முழுக்க முழுக்க மத்திய காவல் படையை ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

மேலும் விடியா அரசின் அமைச்சர் கே.என். நேரு பண பட்டுவாடா குறித்து பேசிய வீடியோ வெளியானதற்கு பிறகு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மாநில தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கூறினார்.அதிமுக சார்பில் வழங்கப்பட்ட புகார் மனு தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளதாக கூறிய சி.வி.சண்முகம், அதிமுக யாருக்காகவும் காத்திருக்காது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version