காஞ்சிபுரத்தில் குழந்தையில்லாத தம்பதியை போலி சாமியார் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூதூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகரன், ஜானகி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகியும் குழந்தை இல்லாததால், பிரபாகரனின் நண்பரான பாபு என்பவரை நாடியுள்ளனர். சாமியாரன இவர் பூஜை ஒன்று செய்தால் சரியாகிவிடுமென அழைத்து சென்றுள்ளார். இருவரையும் கண்ணை மூடியவாறு அமர வைத்த அவர், அவர்களை சுற்றி பெட்ரோலை ஊற்றியதாக கூறப்படுகிறது.
அந்த வாசனையை உணர்ந்து தம்பதியினர் பாபுவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பாபு அருகில் கிடந்த பாறாங்கல்லை தூக்கி பிரபாகரனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், இருந்து தப்பியோடிய ஜானகி தெரிவித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரபாகரனை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார்.
இதையடுத்து இரண்டு செல்போன்கள், 6 பவுன் நகைகளுடன் தலைமறைவான போலி சாமியார் பாபுவை போலீசார் கைது செய்தனர்.
Discussion about this post