சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி புறநோயாளியிடம் பணம் பறித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் தன்னை மருத்துவர் என்று கூறி, ஸ்கேன் எடுக்க 800 பணம் கட்ட வேண்டும் என்று வாங்கிச் சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் வராததால், நடந்ததை மருத்துவர் ஒருவரிடம் லட்சுமி முறையிட்டுயுள்ளார். அப்போது, லட்சுமியை ஏமாற்றிய பெண் அந்த வழியாக நடந்து சென்றதால் அவர் கையும் களவுமாக பிடிபட்டார். சர்மிளா என்ற அந்தப்பெண்ணிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.