தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக பணியாற்றி வந்த டு பிளிஸ்சிஸ், தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில், தென்ஆப்பிரிக்கா அணி மோசமான தோல்வியை சந்தித்ததால், டு பிளிஸ்சிஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. சொந்த மண்ணில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, 1-3 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிக்கொடுத்தது.
இதனையடுத்து, நடைபெற்ற டி20 தொடரில் பிளிஸ்சிஸ்-க்கு ஓய்வு கொடுத்தப்பட்டதால் இளம்வீரர் டி காக் தலைமையில் 20 ஓவர் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி ஆடியது. இத்தொடரை 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பியில் இருந்து விலகுவதாக பிளிஸ்சிஸ் அறிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு குயிண்டன் டி காக் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வகை கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Discussion about this post