உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதியில்லாத மாவட்டங்களில், அதற்கான வசதிகள் விரைவில் கொண்டுவரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Discussion about this post