3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு – பேஸ்புக் அதிர்ச்சித் தகவல்

3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் கணக்கு வைத்திருப்போரின் பெயர், பாலினம், முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவரங்களை ஹேக்கர்கள் டிஜிட்டல் லாகின், பாஸ்வேர்டுகள் மூலம் திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எப்பிஐ மேற்கொண்டுள்ளதாகவும், இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version