652 போலி கணக்குகள் மற்றும் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யாவுடன் இணைந்து தேர்தல் முறைகெட்டில் ஈடுபட்டதாக டொனால்டு டிரம்ப் சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. பேஸ்புக்கின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பட்டது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg ) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தும் கணக்குகள் கண்காணிக்கப்படுவதகவும் , பாதுகாப்பு அதிகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதியளித்து உள்ளார். இதைத்தொடர்ந்து, உலக அரசியலுக்கு கேடு விளைவிக்கும் 652 போலி கணக்குகள் மற்றும் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

Exit mobile version