பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக, பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இந்தியா உள்பட பல நாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், பயனாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேஸ்புக் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் தகவல்களானது, பயனாளர்களின் அனுமதியின்றி, பயன்படுத்தபட்டுள்ளதாகவும் இதன்மூலம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Discussion about this post