இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி காரணமாக சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஸ்டர் தினமாக கடந்த 21ஆம் தேதி இலங்கையில் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் குண்டுவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக தமிழகத்தில் கடற்படை பகுதி, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டார்மி ஆபரேஷன் என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்த சோதனையில், ஆர்.பி.எப் போலீசார் 70 பேர், ரயில்வே போலீசார் 100 பேர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது, உடைமைகள் உள்ளிட்டவைகளில் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே பயணிகள் ரயில்நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
Discussion about this post