சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பாக ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற அகழ்வாய்வு பணிகள் முதல் மூன்று கட்டத்தை, இந்திய தொல்லியல் துறையும், நான்காவது கட்டத்தை தமிழக தொல்லியல் துறையும் நடத்தியது.
ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் குழிகள் தோண்டும் பணி, நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளின் போது கிடைக்கப்பட்ட பொருட்களை விட அதிகமான பொருட்கள் இந்த பகுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post