வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் நவம்பர் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சட்ட மன்ற அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் இணைய தளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனவும், இணையதளத்தில் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள்,
வாக்காளர் பதிவு அலுவலர், அல்லது வருவாய் கோட்டாட்சியர் அல்லது வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் நவம்பர் 18 ஆம் வரை காவ அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்,
புதிய வாக்காளர்கள் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே உள்ளாட்சி அமைப்புக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post