விதிமீறல் கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்காக நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி, 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான கால அவகாசம் தொடர்ந்து 4 முறை நீட்டிக்கப்பட்டது. 4-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம், கடந்த ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மேலும் ஆறு மாதம் அவகாசம் வழங்கி 5-வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆறு மாதத்தில் விதி மீறிய கட்டடங்களை வரன்முறை படுத்த விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post