சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் பைக் திட்டத்தின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தை நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் பைக் திட்டத்தை கொண்டு வந்தது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் ஸ்மார்ட் பைக் திட்டத்தினை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஸ்மார்ட் பைக் செயலி மூலம் இந்த சேவையை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு வரும் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து,ஸ்மார்ட் பைக் திட்டத்தின் சேவை நேரம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post