விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சரியா என உறுதி செய்ய பெண் நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில்,சட்டவிரோத நடவடிக்கைகள் சட்ட விதிகளின் கீழ், விடுதலைப்புலிகள் இயக்கத்தை ‘சட்டவிரோத இயக்கம்’ என்று இந்திய அரசு தடை விதித்தது. இதற்கான தடை 2019ம் ஆண்டு மே 14ம் தேதியில் இருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலை புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை சரியா என உறுதி செய்ய பெண் நீதிபதி சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார். இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்து உள்ளது.
Discussion about this post