டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுவருகிறது. இதற்காக டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை, கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 15ம் தேதி முதல் பெறப்பட்டன. மேலும், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் இருந்த காரணத்தால் ஏப்ரல் 12ம் தேதிவரை விண்ணப்பிக்க அவகாசம் அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 12ம் தேதிமாலை 5 மணிவரை www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version