ஆந்திர மாநிலம் குண்டூரில் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில், இளம் பெண் ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது.
குண்டூர் மாவட்டம் தடே பள்ளி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் மாலை 6 மணி அளவில் பெரும் சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வீட்டில் இருந்த பிங்கி என்ற இளம்பெண்ணுக்கு கண்ணில் பலத்தை காயம் ஏற்பட்டு, கண் பார்வை பறிபோனது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் பூண்டு வெடிகளை தயார் செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post