சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் குப்பை மற்றும் ஆற்றல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது குறித்த இந்தக் கண்காட்சியில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆணையாளர் மதுசூதனன் ரெட்டி, பயோ கேஸ் தயாரிக்கும் முறை, மறுசுழற்சி தொழில்நுட்பம் மற்றும் அதிலிருந்து ஆற்றல்கள் உருவாக்கும் முறைகள் உள்ளிட்டவைகளை இங்குத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். பொதுமக்கள் வீட்டில் உள்ள குப்பைகளை சேகரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். சென்னை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 1000 டன் முதல் 1,200 டன் குப்பைகள் வரை மறுசுழற்சி செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளதாகவும் மதுசூதனன் ரெட்டி தெரிவித்தார்.
Discussion about this post