கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்று வரும் வாவுபலி பொருட்காட்சியில், விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், களைகட்டியது.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை அன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இதையொட்டி, ஆற்றின் கரையோரம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான மைதானத்தில் 20 நாட்கள் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. விவசாய பொருட்கள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை கவரும் வகையில், ராட்சத ராட்டினங்கள், மரண கிணறு, சர்க்கஸ் வீரர்களின் சாகசங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வார விடுமுறை நாளான நேற்று தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பொருட்காட்சியில் குவிந்தனர். கரணம் தப்பினால் மரணத்தை ஏற்படுத்தும் மரண கிணற்றில் கார்கள், இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Discussion about this post