இறுதி பருவத் தேர்வுகளை தவிர, பிற பருவப் பாடங்களுக்கான தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், UGC மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு வழிகாட்டுதல்படியும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு இந்த பருவத்தேர்வில் இருந்து விலக்கு அளித்தது உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மாணவர்களின் நலன் கருதியும், அரசின் உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையிலும் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து UGC மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுயின் வழிக்காட்டுதல் படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விரைவில் உயர்கல்வித்துறை சார்பில் விரிவான அரசாணை வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post