சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற குதிரை ரேக்ளா பந்தயத்தை, ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில், சேலம், கடலூர், பவானி, குமாரபாளையம், நாச்சியார்கோயில், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 28 குதிரைகள் பங்குபெற்றன. போட்டியில் கலந்துகொண்ட குதிரைகள், பாய்ந்து ஓடியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பந்தயத்தில், ஆத்தூரை சேர்ந்த குதிரை முதல் பரிசை வென்றது. பின்னர், பெரிய ரக குதிரைகளுக்கான ரேக்ளா போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Discussion about this post