தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் துவங்கும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக இரண்டாயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று தொடங்கும் தேர்வுகள் வரும் 19ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தேர்வு முடிவுகள் மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட உள்ளது. சென்னையில் 408 பள்ளிகளில் இருந்து, மொத்தம் 49 ஆயிரத்து 419 பேர் எழுத உள்ளனர். முதன்முறையாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் வினா, விடைத்தாள்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. முறைகேடுகளைத் தவிர்க்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது. ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் வைத்திருக்கக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Discussion about this post