மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தொலைநோக்கு பார்வையும், சிந்தனையும், நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பதால், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளையொட்டி, 10 கோடியே 51 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவிடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக வாஜ்பாயின் சிறப்பை போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.
இதனிடையே, டெல்லியில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. இன்று அவரது பிறந்த நாளையொட்டி நடைபெறும் நினைவிட திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.